Thursday, July 25, 2024
Home » புதிய மகாவலி அபிவிருத்தி பிரிவு ஆரம்பம்

புதிய மகாவலி அபிவிருத்தி பிரிவு ஆரம்பம்

by sachintha
May 16, 2024 10:06 am 0 comment

இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய மற்றும் கொலன்ன விவசாய பிரதேசங்களில் 47 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய மகாவலி அபிவிருத்தி பிரிவொன்றை அமைத்துள்ளதாக வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,

இப்பிரதேச மக்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி அவர்களை பொருளாதார சமூக ரீதியாக வளப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கொலன்ன பிரதேசத்தை மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டு வருமாறு பிரதேச விவசாய அமைப்புகள், பொதுமக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். அதற்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாவலித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளின் பின்னர் உடவளவ நீர்த்தேக்க நீர் வளத்தால் இவ்வாறான ஒரு அபிவிருத்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

 

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT