பதினொரு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, அவற்றுக்கான சில்லறை விலைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.
கோதுமை மா, மைசூர் பருப்பு, வெள்ளைச் சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. மேற்படி 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எதிர்வரும் (19) வரை மேற்படி நிர்ணய விலைகளில் விற்பனை செய்யுமாறு அதிகார சபை வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
- கோதுமை மா ஒரு கிலோவை 179 – 189 ரூபா வரை விற்பனை
- வெள்ளைச் சீனி ஒரு கிலோவை 258 ரூபா – 275 ரூபா வரை விற்பனை
- மைசூர் பருப்பு ஒரு கிலோவை 288 ரூபா – 302 ரூபா வரை விற்பனை
அதே வேளை, முட்டைகளின் விலைகளை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டையொன்று 41 ரூபாவிலிருந்து 43 ரூபா வரை விற்பனை செய்வதற்கும், சிவப்பு முட்டை ஒன்றை 45 ரூபா முதல் 47 ரூபா வரை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)