Tuesday, May 28, 2024
Home » எதிர்வரும் 5 வருடங்களில் பிரிட்டன் மிகவும் ஆபத்தான நாடாகும்

எதிர்வரும் 5 வருடங்களில் பிரிட்டன் மிகவும் ஆபத்தான நாடாகும்

பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

by mahesh
May 15, 2024 11:40 am 0 comment

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான நாடாக பிரிட்டன் மாறுமென, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவு திரட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கூட்டமொன்றில் இதனை தெரிவித்தார். இந்நிலையை தன்னால் மட்டுமே தடுக்க முடியுமெனவும் பிரதமர் ரிஷிசுனாக் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தலாக மாற்றக்கூடியதாக நம்பப்படும் 07 காரணிகளையும் அவர் இதன்போது வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், செயற்கை நுண்ணறிவுடன் (AI) புதிய தொழில்நுட்பம், அணு ஆயுத ஆபத்து அதிகரிப்பு, தீவிரவாதிகளை பலப்படுத்தும் போக்கு, விளாடிமிர் புடினின் நேட்டோ இலக்கு மற்றும் போர்ச் சூழல் போன்ற காரணிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் பிரிட்டனின் ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை அமைதியற்று காணப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதிலிருந்து விடுபட எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அடுத்த தேர்தலில் முடிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT