Friday, June 21, 2024
Home » ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் ஆர்ப்பாட்டம்

by mahesh
May 15, 2024 9:24 am 0 comment

ஆப்கானிஸ்தானில் இருந்து செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் விசாவுடன் மட்டுமே பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையிலுள்ள சாமன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் மக்களும், வர்த்தகர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கடந்த ஒக்டோபர் முதல் இம்முறைக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு காவலரணைத் தாக்கி கட்டிடத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மீது கற்களையும் வீசியுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதோடு ஒருவர் கொல்லப்பட்டும் சிலர் காயமடைந்தும் உள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT