Tuesday, May 28, 2024
Home » பாடசாலை வலைப்பந்தில் சம்பியனானது கேட்வே

பாடசாலை வலைப்பந்தில் சம்பியனானது கேட்வே

by mahesh
May 15, 2024 10:24 am 0 comment

இலங்கையின் பிரதான சர்வதேச பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வலைப்பந்து போட்டியில் கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டி முழுவதும் திறமையை வெளிப்படுத்திய கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலையின் 12 வயது தினி ஜயவீர சிறந்த வீராங்கனை விருதை வென்றார்.

15 சர்வதேச பாடசாலைகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையை எதிர்கொண்ட கொழும்பு கேட்வே, 10–8 என வெற்றியீட்டியது.

பிரின்ஸ் குணசேக

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT