Wednesday, October 9, 2024
Home » இலங்கை ஏ இன்னிங்ஸ் வெற்றி

இலங்கை ஏ இன்னிங்ஸ் வெற்றி

by mahesh
May 15, 2024 8:46 am 0 comment

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான ஒரே ஒரு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் நேற்று நிறைவடைந்த இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 237 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆப்கானிஸ்தான் ஏ அணி 62.3 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது இலங்கை ஏ அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான நிசல தாரக்க 11.3 ஓவர்களில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். வலது கை சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக ஆப்கான் ஏ அணி 108 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே நேற்றைய ஆட்டத்தை ஆரம்பித்ததோடு அந்த அணி மேலும் 103 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சொனால் தினூஷவின் சதத்தின் (145) உதவியோடு 435 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் ஆப்கான் ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கே சுருண்டு இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஓன் செய்ய வேண்டி ஏற்பட்டது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கான் ஏ அணி, இலங்கை ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 2–3 என தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x