Thursday, July 18, 2024
Home » சந்நிதி- கதிர்காமம் பாதயாத்திரை குழுவினருக்கு அமோக வரவேற்பு
பளையில்

சந்நிதி- கதிர்காமம் பாதயாத்திரை குழுவினருக்கு அமோக வரவேற்பு

by mahesh
May 15, 2024 12:10 pm 0 comment

யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ள சந்நிதி- கதிர்காமம் பாத யாத்திரை குழுவினர் மூன்று நாட்களில் பளையை சென்றடைந்தனர். இந்நிலையில் பளையில் அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாக இந்தக் குழுவினர், இயக்கச்சி சென்று, ஆனையிறவு பாலத்தினூடாக உமையாள்புரத்தை சென்றடைந்துள்ளனர்.

இப்பாத யாத்திரை குழுவினர் தமது பாத யாத்திரையின் மூன்றாவது நாளன்று துர்காபுரம் துர்க்கை அம்மன் கோயிலிலிருந்து பளை அம்மன் கோயிலைச் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் பளை நரசிம்ம வைரவர் கோயிலைச் சென்றடைந்தனர்.

பளை நரசிம்ம வைரவர் கோயிலில் அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், அங்கு ஓம் ரீவி நிறுவனத்தினர் பாத யாத்திரிகர்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கினர்.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT