Home » வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் மே 20 இல்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் மே 20 இல்

by mahesh
May 15, 2024 11:30 am 0 comment

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (20) மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கடல் தீர்த்தம் எடுக்கும் விழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் பொங்கல் உற்சவம் நடைபெறுவதற்கு முன்னர் கடல் தீர்த்தம் எடுத்து, அதில் விளக்கு ஏற்றும் விழா ஒவ்வொரு முறையும் நடைபெறுவது வழமையாகும். இதற்கமைய இம்முறையும் முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலுக்கு கடல் தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தீர்த்தம் பானையில் இடப்பட்டு, உவர் நீரில் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்விளக்கு தொடர்ந்து எரியவிடப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) காட்டா விநாயகர் கோயிலில் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி அதிகாலை இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் கோயிலிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இதன் பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது.

ஓமந்தை விசேட, மாங்குளம் குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT