Friday, June 21, 2024
Home » அம்பாறை மாவட்ட அறபுக் கல்லூரி நிர்வாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு

அம்பாறை மாவட்ட அறபுக் கல்லூரி நிர்வாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு

by mahesh
May 15, 2024 8:40 am 0 comment

அம்பாறை மாவட்டத்திலுள்ள அறபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு அண்மையில் அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அறபுக் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில், அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் ஸூரி மதனி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், 35 அறபுக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 90 பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ் – றஷாதி (அதிபர், அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரி), ‘கற்றல் கற்பித்தலின் போது ஆசிரியர் மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும்? – ஓர் உளவியல் நோக்கு’ எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் – நழீமி (அமீர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா, எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்), ‘சமூக நலனில் அறபுக் கல்லூரிகள் மீதான பொறுப்புக்களும் கடமைகளும்’ எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க், கலாநிதி எம்.எல்.முபாறக்- மதனி (முதல்வர், தாருல் ஹுதா மகளிர் அறபுக் கல்லூரி, மருதமுனை), ‘அறபுக் கல்லூரிகள் ஆளுமையுள்ள ஆலிம்களை எவ்வாறு உருவாக்க முடியும்’ எனும் தலைப்பிலும் ஆழமானதும் அறிவுபூர்வமானதுமான அனுபவ ரீதியான உளவியல் கருத்துக்களை பங்குபற்றுனர்களின் கவனத்தை கவரும் வகையில் முன்வைத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT