Tuesday, May 28, 2024
Home » மட்டக்களப்புக்கு அநுராதபுரம் மாணவர்கள் நல்லிணக்க களவிஜயம்

மட்டக்களப்புக்கு அநுராதபுரம் மாணவர்கள் நல்லிணக்க களவிஜயம்

by mahesh
May 15, 2024 1:50 pm 0 comment

மட்டக்களப்பிற்கு அநுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் ஆர் ஹெரத்தினின் வழிகாட்டுதலின் கீழ் இவ்விஜயம் அமைந்திருந்தது.

அகில இலங்கை ரீதியாக இன,மத வேறுபாடு இன்றி சகோதரத்துவத்தை முன்னிறுத்தி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக களவிஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்கள பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அநுராதபுரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு வருகை மேற்கொண்டு பிரதேச மாணவர்களுடன் கலந்துரையாடி நட்புறவை ஏற்படுத்திக் கொண்டமை சிறப்பம்சமாகும். இதன்போது மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.பிரேமிலா கோபிநாத், ஆசிரியர் நேஷாந் பெர்ணான்டோ ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT