Sunday, June 23, 2024
Home » ஹஜ் யாத்திரிகர்களுக்கான தோழன் நூல் வெளியீடு
சாய்ந்தமருதில்

ஹஜ் யாத்திரிகர்களுக்கான தோழன் நூல் வெளியீடு

by mahesh
May 15, 2024 1:40 pm 0 comment

முல்தஸம் ஹஜ் குறூப் ஊடாக புனித ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளை வழிகாட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள ஹாஜிகளின் தோழன் என்ற புத்தகத்தின் மீள் வெளியீட்டு நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மௌலவி எம்.எஸ்.எம். சுஹூர்தீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

முல்தஸம் ஹஜ் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எப்.ஆர். முகத்தஸியின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல். பரீட், மௌலவி சஹ்றான், மௌலவி ரயீஸ் முப்தி மற்றும் மௌலவி சபா மொகமட் அல் நஜாஹி முகத்தமுல் காதிரியி ஆகியோரும் மார்க்க சொற்பொழிவாற்றினர்.

ஹாஜிகளின் தோழன் புத்தகம் தொடர்பில் முன்னாள் கணக்காளர் ஐ.எல்.எம்.பாறூக் உரையாற்றினார். அதேவேளை நூல்களின் பிரதிகளை அதிதிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திராய்க்கேணி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT