Home » பங்களாதேஷ் தூதுக்குழுவினர் களுத்துறை செயலகத்துக்கு விஜயம்

பங்களாதேஷ் தூதுக்குழுவினர் களுத்துறை செயலகத்துக்கு விஜயம்

முக்கிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்

by mahesh
May 15, 2024 9:00 am 0 comment

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இரண்டு நாடுகளின் அனர்த்த நிலைமைகள், முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் தூதுக்குழுவினர், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாட களுத்துறை மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்து மாவட்ட செயலாளர் ஜீ. ஜனக பிரசன்ன குமார தலைமையில் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கர்னல் எம்.ஏ.பீ.எஸ். பெரேரா மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தூதுக் குழுவினருக்கு கூட்டத்தில் விளக்கமளித்தார். களுத்துறை செயலகத்தில் நடத்தப்பட்டுவரும் living Lab பிரிவையும் பங்களாதேஷ் தூதுக் குழுவினர் பார்வையிட்டனர்.

பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எம்.கமருல் ஹஸன், உதவி செயலாளர்களான லுத்பன் நஹார், எம்.நஸ்முல் ஆப்தீன் மற்றும் பேராசிரியர்களுக்கு, களுத்துறை மாவட்ட செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் தமித் சேரவில உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT