Friday, June 14, 2024
Home » இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யாவில் 05ஆவது பட்டமளிப்பு விழா

இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யாவில் 05ஆவது பட்டமளிப்பு விழா

by mahesh
May 15, 2024 10:50 am 0 comment

அ/ இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யா அரபுக் கல்லூரியின் 05 ஆவது பட்டமளிப்பு விழா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அநுராதபுரம் கிளையின் தலைவரும், கல்லூரி முதல்வருமான அஷ்- ஷெய்க் ஆதம் யாசின் (ரஹ்மானி) தலைமையில் கடந்த 10 வெள்ளி இக்கிரிகொல்லாவ ஜும்ஆப் பள்ளிவாசலில், ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ் – ஷெய்க் எச். உமர்தீன் மௌலவி, மௌலவி இஸ்மாயில் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். இங்கு உலமாக்களின் சிறப்பும் அவர்களின் மாண்பும் என்ற தலைப்பின் கீழ் ஜும்ஆ உரை ஏற்பாடு செய்யப்பட்டு இப்பட்டமளிப்பு விழாவை கல்லூரி நிர்வாகிகளும் பள்ளி நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஹமீதிய்யா அரபுக் கல்லூரியின் 2024 ஆம் வருடத்தின் ஐந்தாவது அல் ஆலிம் பட்டத்தை 11 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் ஹமீதியா அரபுக் கல்லூரியின் நிர்வாகிகள், போசகர்கள் இக்கிரிகொல்லாவ ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள், போசகர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர், முக்கியஸ்தர்கள் நலன் விரும்பிகள் என பலர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT