Home » தென் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிவர்த்திக்கப்படும்

தென் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிவர்த்திக்கப்படும்

மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு

by mahesh
May 15, 2024 10:10 am 0 comment

தென் மாகாண பாடசாலைகளில் நிலவும் 3230 ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த இரண்டு மாதத்துக்குள் பூரணப்படுத்தப்படும். நியமனம் பெறும் ஆசிரியர்கள் யாருடைய பின்னாலும் செல்ல வேண்டி அவசியம் ஏற்படாது. அனைவருக்கும் அவரவர் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதி பாடசாலைகளிலியே நியமனம் வழங்கப்படுமென தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வெலிகம நகரசபை மண்டபத்தில் (10) முதற் கட்டமாக 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் பத்திரம் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்; நான் வடமேல் மாகாண ஆளுநராக பொறுப்பேற்றபோது ஒன்பது மாகாணங்களில் வடமேல் மாகாணம் 8ஆவது இடத்தில் இருந்தது. எனினும் வடமேல் மாகாண பாடசாலைகளின்

அதிபர்களை சந்தித்து அவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக 4வது இடத்துக்கு வடமேல் மாகாணம் முன்னேறியது. தென் மாகாணம் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் படி முன்னிலையில் உள்ளது. எனினும் க.பொ.த. உயர்தர பெறுபேற்றின் படி 8ஆவது இடத்திலேயே உள்ளது. இதனை உயர்த்த வேண்டிய தேவை தற்போதுள்ளது.

தென் மாகாணத்தில் இன்னும் ஓரிரு மாதத்துக்குள் 30000 வரை ஆசிரியர் அதிகமாவார்கள். தென் மாகாணத்தில் தேசிய பாடசாலைகள் 70 உள்ளன. தென் மாகாண சபைக்கு கீழ் 1033 பாடசாலைகள் உள்ளன.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் நிலவும் சகல குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும். தொழிநுட்டபம் காரணமாக தென் மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்க தொடர்ந்து தாமதமாகியிருந்தது. ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் தமது பிள்ளைகளின் மீது நம்பிக்கையுண்டு.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க விசேட திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரித்திருந்தார். அது இல்லாமல் போய் விட்டது. எமது நாட்டில் பிரதானமானது கல்வி தான். கடந்த காலங்களில் பட்டதாரிகள் மிகவும் கவலையுடன் இருந்தனர் என்றும் ஆளுனர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

வெலிகம தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT