Sunday, June 16, 2024
Home » கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

by mahesh
May 15, 2024 10:00 am 0 comment

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தினம் அண்மையில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் Artificial Intelligence, Disinformation deep fake and Democracy எனும் தலைப்பில் அதிதிகளின் பேச்சுக்கள் இடம் பெற்றன. இங்கு கலாநிதி ரங்கன கலன்சூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.எம். சுஹைர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆகியோர் உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், லிபியா, பலஸ்தீன் நாட்டு தூதுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர், சபாநாயகர், ஆளுநர் போன்ற பதவிகளை வகித்த மர்ஹூம் தேசமான்ய எம்.ஏ பாக்கீர் மாக்காரின் காலத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஸ்தாபிக்கப்பட்டது. இவ் முன்னணி அரசியல் வேறுபாடுகளின்றி நாடளாவிய ரீதியில் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு இன்றும் விரிவாக இயங்கி வருகின்றன.

இவ் இயக்கம் முஸ்லிம் வாலிபர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான சிறந்த தலைமைத்துவ பயிற்சிகள், அவ்வப்போது நாட்டில் நடைபெறும் பிரச்சினைகள், முஸ்லிம் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் மட்டத்திற்கு கொண்டு செல்லுதல், அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளல், தேசிய நல்லிணக்க விடயங்களை கலந்தாலோசித்தல், பிராந்திய ரீதியில் அரசியல் தலைமைகளை நாடி அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களை செயற்படுத்தும் ஓர் இயக்கமாகும். கடந்த 76 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இவ் இயக்கம் வருடா வருடம் தேசிய ரீதியில் இளம் தலைவர்களையும் உருவாக்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT