Thursday, July 18, 2024
Home » முழங்காவிலில் மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகள் அழிப்பு

முழங்காவிலில் மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகள் அழிப்பு

by mahesh
May 15, 2024 12:20 pm 0 comment

முழங்காவில், நாச்சிக்குடா பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத பெருமளவான உணவுப் பொருட்களை பூநகரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றி அழித்துள்ளனர்.

பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையிலான குழுவினர் அண்மையில் முழங்காவில், நாச்சிக்குடாவிலுள்ள உணவு விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தினர்.

இதன்போது பழுதடைந்த உணவுப் பொருட்களை களஞ்சிய அறையில் பேணியமை, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை குளிரூட்டியில் ஒன்றாக வைத்தமை, தயாரித்த உணவை திறந்த நிலையிலும் மாசடையக்கூடிய பொருட்களுடன் தொடுகையிலும் வைத்தமை, எலி எச்சங்களுடன் கூடிய அலுமாரியில் உணவுப் பொருட்களை வைத்தமை போன்ற காரணங்களால் பல உணவுப் பொருட்களை தாம் கண்டுபிடித்ததாகவும், பூநகரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். இதன்போது பாண், பணிஸ், கொத்துறொட்டி, சோறு, இறைச்சி போன்ற உணவு வகைளையே கைப்பற்றி அழித்ததாகவும், அவர்கள் கூறினர்.

இந்நிலையில் மேற்படி குற்றங்களுக்காகவும் மருத்துவச் சான்றிதழின்றி உணவுகளை கையாண்டவர்களுக்கு எதிராகவும் பாதுகாப்பற்ற நிறுவனக் கட்டமைப்புகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பூநகரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT