Friday, June 14, 2024
Home » புதுக்குடியிருப்பில் புதிய நெசவு நிலையம் திறப்பு

புதுக்குடியிருப்பில் புதிய நெசவு நிலையம் திறப்பு

by mahesh
May 15, 2024 11:40 am 0 comment

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் முல்லை கைத்தறி நெசவு நிலையம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் வடக்கு, கிழக்கு பொருளாதார மேம்பாட்டு நடுவத்தினால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு இந்நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் எழுகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்துடன் இணைந்து இந்த தொழில் முயற்சி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலார் சிவராசசிங்கம் ஜெயகாந்த், பிரதேச சபை செயலாளர் சச்சிதானந்தம் கிரிசாந்தன், கனேடிய தமிழர் பேரவையின் மனிதநேய பணிகளுக்கான இணைப்பாளர் துரைரத்தினம் இராசலட்சுமி துசியந்தன், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பட்டு நடுவத்தின் இயக்குநர் சோதிலிங்கம் பிரதீபன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர்களுடன் வேறு பல பிரதேச செயலக அதிகாரிகளும் உள்ளூர் தொழில் முனைவோரும் பயனாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT