Home » நெடுங்கண்டல் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றம்

நெடுங்கண்டல் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றம்

மன்னார் அரச அதிபர்

by mahesh
May 15, 2024 11:20 am 0 comment

மன்னார், நெடுங்கண்டல் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

நெடுங்கண்டல் வாய்க்கால் மூடப்பட்டதை கண்டித்து மாந்தை மேற்கு பிரதேச விவசாயிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

விவசாய பிரதிநிதிகள், விவசாய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாயிகள் சமர்ப்பித்த மகஜர் பரிசீலிக்கப்பட்டது.

இதுவரை சிறுபோக நெற்செய்கைக்கு விண்ணப்பிக்காதவர்களு க்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

தலைமன்னார் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT