இலங்கையின் மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும், பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ் ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர் சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார்.
(அமரர்) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும்,
கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும் ஆக்கங்கள் கோரப்படுகின்றன. அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம்.நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[email protected]
(தகவல்: லெ. முருகபூபதி)