இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் (UAE) இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, செபா கவுன்சிலின் பணிப்பாளர் அஹ்மத் அல்ஜ்னி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிபா) நடைமுறைக்கு வந்த பின்னர் இரு பக்க வர்த்தகத்தில் இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அஹ்மத் அல்ஜ்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையிலான இரு பக்க வர்த்தகம் 2021 இல் 73 பில்லியன் டொலராகக் காணப்பட்டது. அது 2023 ஆகும் போது 84 பில்லியன் டொலர்கள் வரை உயர்ந்துள்ளது. 2030 ஆம் ஆண்டாகும் போது இரு நாடுகளுக்கு இடையிலான எண்ணெய் அல்லாத வர்த்தகம் 100 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம் வளைகுடா நாடான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆண்டில் மாத்திரம் இந்தியாவில் மேற்கொண்ட நேரடி முதலீடு 3.3 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.