Tuesday, May 28, 2024
Home » கஹகொல்ல அல் பதுரியா முஸ்லிம் ம. வியின் வருடாந்த பரிசளிப்புவிழா

கஹகொல்ல அல் பதுரியா முஸ்லிம் ம. வியின் வருடாந்த பரிசளிப்புவிழா

by mahesh
May 15, 2024 8:00 am 0 comment

கஹகொல்ல, தியத்தலாவை அல் பதுரியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், தியத்தலாவ ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை சுற்றுவட்டார வேலி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் அண்மையில் அதிபர்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றன.

இதன்போது ஜே.ஜே நலன்புரி அமைப்பின் தலைவர் டொக்டர் அனீப் ஜே.பி,தொழிலதிபர் லயன்ஸ் நூறுல்லாஹ் ஜே.பி,அல்பதுரியா ஜும் ஆ பெரியபள்ளிவாயல் தலைவர் தேசமான்ய எம்.ஏ. எம்.ஹசனார் ஜே.பி, ஜனாசா சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளை மாணவர்கள் பாண்ட் வாத்தியம் இசைத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் விழா ஆரம்பமானது.

பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவை ஐந்தாம் தரம் புலமைப் பரிசில், க.பொ.த (சா/த), (உ/த) மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் கற்பித்த ஆசான்களுக்கும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில் பாடசாலை சுற்று வட்டாரத்துக்கான மதிலுக்கான அடிக்கல் நடப்பட்டது.

எம்.ஏ.எம்.ஹசனார் 
(ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT