Tuesday, May 28, 2024
Home » ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் சிட்னியில் வெளியீடு

ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் சிட்னியில் வெளியீடு

'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' உட்பட மூன்று நூல்கள்

by mahesh
May 15, 2024 6:00 am 0 comment

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் நடைபெற உள்ளன.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு சிட்னியில் உள்ள பெமுள்வே சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Allan G Ezzy Community Centre,(Near Woolworths) 1 Newport St, Pemulwuy, NSW என்ற முகவரியில் இம்மண்டபம் அமைந்துள்ளது.

எதிர்வரும் ஜூன், வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி மாலை 18.30 முதல் 21.00 வரை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றுவார்.

‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’ நூல் அறிமுகவுரையை தனபாலசிங்கம் நிகழ்த்துவார். அதன் பின்னர் ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ நூலின் அறிமுகவுரையை ​ெடாக்டர் ஹாரூன் காசிம் ஆற்றுவார்.

‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் சுந்தரதாஸ் ஆற்றுவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அத்துடன் கலாநிதி திருமதி சந்திரிக்கா சுப்ரமணியன், திருநந்தகுமார் சிறப்புரை ஆற்றுவர்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சிட்னியில் நடைபெறும் இந்நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவருடனான சந்திப்பும், நூல்கள் வெளியீடும் நடைபெற உள்ளன.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெறும் நூல் வெளியீடு, இலக்கிய அரங்கின் ஏற்புரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்துவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT