Tuesday, May 28, 2024
Home » மனித பாவனைக்கு உதவாத 2 இலட்சம் கிலோ அரிசி மீட்பு

மனித பாவனைக்கு உதவாத 2 இலட்சம் கிலோ அரிசி மீட்பு

நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பு

by mahesh
May 15, 2024 10:20 am 0 comment

அநுராதபுரம் நுகர்வோர் அதிகார சபை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கிரிஇப்பேவ தனியார் அரிசி ஆலைக்கு கொண்டு சென்று இறக்கிக்கொண்டிருந்த மனித பாவனைக்குதவாத அரிசி தொகையினை நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த அரிசி தொகை 2 இலட்சம் கிலோ நிறையை கொண்டது எனவும் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட அரிசி தொகையினை பொரளையில் அமைந்துள்ள வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி தொகையை குறித்த அரிசி ஆலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அரிசி ஆலை உரிமையாளர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT