Thursday, December 12, 2024
Home » G .V.பிரகாஷை பிரிந்தது ஏன்?; பாடகி சைந்தவி விளக்கம்

G .V.பிரகாஷை பிரிந்தது ஏன்?; பாடகி சைந்தவி விளக்கம்

by Prashahini
May 15, 2024 2:35 pm 0 comment

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான G.V. பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி சைந்தவியின் பிரிவிற்குரிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.

நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து, பெற்றோர் சம்பந்தத்துடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழந்து வந்தவர்கள், திடீரென இந்த முடிவை எடுத்தது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இசை அமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹைனாவின் மகனான G.V.பிரகாஷ் இசை அமைப்பதோடு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சைந்தவி, பின்னணி பாடி வருகிறார்.

G.V.பிரகாஷுக்கும், சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுபற்றி சைந்தவி வெளியிட்ட பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம்.

அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். G.V.பிரகாஷும் இதே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த முடிவானது இருவருக்கும் நன்மையை வழங்குவதாகவும் தங்களின் முடிவுக்கு இரசிகர்கள் மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணம் இதுவாக தான் இருக்கக் கூடும் என திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இசையமப்பாளராக மட்டமல்லாமல் நடிகராகவும் G.V. பிரகாஷ் குமார் அறிமுகமாகினார். இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய Bachelor படத்தின் காரணமாக இந்த ஜோடியின் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT