Tuesday, May 28, 2024
Home » கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE

by mahesh
May 15, 2024 6:00 am 0 comment

இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள HNB FINANCE, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக, பல சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்தன் மூலம், இதுவரை HNB FINANCE நிதிச் சேவைகள் அல்லது பிற புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிக்காத தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்கள் HNB FINANCE மூலம் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, HNB FINANCE இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதுரங்க ஹீன்கெந்த மற்றும் ஏனைய அதிகாரிகளும் சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களின் கௌரவத் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் மற்றும் செயலாளர்களும் கலந்து கொண்டதுடன், மேலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி பிரதி ஆணையாளர் தலைமையில் கூட்டுறவு திணைக்களத்தின் தலைமையக பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல தசாப்தங்களாக இலங்கை மக்களுக்காக புத்தாக்கமான வங்கிச் சேவைகளை வழங்கி வரும் HNB இன் துணை நிறுவனமாக HNB FINANCE இன் சிறந்து விளங்குவதுடன் சர்வதேச மட்ட வங்கிச் சேவைகளையும் இலங்கை கூட்டுறவுச் சங்க வர்த்தகத்தில் 118 வருட நுண்நிதி அனுபவத்தையும் 8 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT