Home » வெளிநாடுகளிலிருந்து வந்த போதைப் பொருட்கள் சிக்கின

வெளிநாடுகளிலிருந்து வந்த போதைப் பொருட்கள் சிக்கின

- பெறுமதி சுமார் ரூ. 9 மில்லியன் என மதிப்பீடு

by Prashahini
May 15, 2024 11:13 pm 0 comment

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட, ரூ. 9 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பொதிகள் கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் வேயங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு விமான தபால் சேவை மூலம் நேற்று (15) அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பொதிகளிலிருந்து 150 போதை மாத்திரைகள், 466 கிராம் “குஷ்” , கஞ்சா மற்றும் 10 கிராம் கொக்கையின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x