Tuesday, May 28, 2024
Home » நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

by Prashahini
May 15, 2024 11:02 pm 0 comment

குஜராத் மாநிலம், பொய்ச்சா பகுதியில் நர்மதா நதியில் குளித்த சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது, ​​தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

பொய்ச்சா நர்மதா நதி பிரபலமான கோடைகால சுற்றுலாப் பகுதியாகும். இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நதியில் குளிப்பது, படகு சவாரி செய்து வந்தனர். இதையடுத்து நர்மதா மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் உள்ளூர் படகு உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் நதியில் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

அதே நேரத்தில், வதோதரா மாவட்ட நதியின் ஓரத்தில் படகு ஓட்டுநர்கள் தொடர்ந்து படகுகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (14) காலை சூரத்தில் இருந்து வந்த ஒரு சுற்றுலா குழுவினர் வதோதரா மற்றும் நர்மதா மாவட்டங்களின் எல்லையில் உள்ள பொய்ச்சா நர்மாத நதியில் குளித்துள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.

தற்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT