Tuesday, May 28, 2024
Home » பச்சை கட்டலுடன் ஆரம்பமான அம்பாளின் பகல் பூஜை

பச்சை கட்டலுடன் ஆரம்பமான அம்பாளின் பகல் பூஜை

by Prashahini
May 15, 2024 3:58 pm 0 comment

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கின் பச்சை கட்டல் என்ற பாரம்பரிய நிகழ்வுடன் பகல் பூஜை இன்று (15) ஆரம்பமானது.

சோறு மற்றும் கறிகள் குழைத்து எடுத்த குழைசாதம் போல் அந்த பச்சை கட்டல் நிகழ்வு இடம்பெறுவது வழமை. அந்த நிகழ்வு இவ்வாண்டில் முதன் முதலாக இன்று 1.00 மணியளவில் முதலாவது பகல் பூஜை குரவை ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து ஐந்து தினங்கள் பகல் பூஜை இந்த பச்சை கட்டல் நிகழ்வுடன் நடைபெறும்.

நேற்றைய தினம் (14) நூற்றுக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்து கொண்டார்கள்.

நேற்று முன்தினம் (13) ஆரம்பமாகிய இச்சடங்கு தொடர்ந்து 08 தினங்கள் நடைபெற்று, 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.

குதிரை வண்டி சகிதம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மரபுப்பட்டய அறிவிப்பு

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT