Tuesday, May 28, 2024
Home » கனமழையினால் இந்தோனேசியாவில் 58 பேர் பலி

கனமழையினால் இந்தோனேசியாவில் 58 பேர் பலி

by Prashahini
May 15, 2024 1:46 pm 0 comment

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை – வெள்ளத்துக்கு 58 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT