Friday, June 21, 2024
Home » பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க புதிய சட்டமூலங்கள்

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க புதிய சட்டமூலங்கள்

சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே எம்.பி சபையில் சமர்ப்பிப்பு

by mahesh
May 15, 2024 7:20 am 0 comment

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் இரண்டு புதிய சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனிநபர் பிரேரணைகளாக இச்சட்டமூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் 30 வீதத்துக்குக் குறையாத வகையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்வாங்கும் வகையில், பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையாக இச்சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் தேசியப் பட்டியலில் 50 வீதத்துக்குக் குறையாத பெண் உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் மேற்படி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக இது கருதப்படவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT