Saturday, June 15, 2024
Home » இணுவில் ஐஸ் போதை உற்பத்தி ஆய்வுகூடம் அதிரடி சுற்றிவளைப்பு

இணுவில் ஐஸ் போதை உற்பத்தி ஆய்வுகூடம் அதிரடி சுற்றிவளைப்பு

வீட்டிலிருந்த 04 பேர் தப்பியோட்டம்

by mahesh
May 15, 2024 6:50 am 0 comment

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, போதைப்பொருள் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இணுவில் பகுதியில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டைச் சுற்றி வளைத்தனர். இதன் போது வீட்டிலிருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். வீட்டினுள் சென்ற பொலிஸார் சோதனை நடத்திய போது , வீட்டின் அறை ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான ஆய்வு கூடங்கள் போன்று காணப்பட்டுள்ளன .

அத்துடன் சில மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக சேகரித்தும் சென்றனர். இதன் ஆரம்ப கட்ட தகவலின்படி, இரசாயன பதார்த்தங்களை பிரித்தெடுத்து, ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் கட்டமைப்பு காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இரசாயனவியல் தொடர்பிலான அறிவுள்ள நபர்கள் மூலமாகவேதான் இவற்றை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். தற்போது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இரசாயன பகுப்பாய் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களையும் ,வீட்டில் வசித்து வந்தவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

அதேவேளை வீட்டில் வசித்து வந்த, பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இயங்கிய வன்முறை கும்ப லுடன் ஈடுபட்டு குற்றங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், தற்போது வன்முறை சம்பவங்களிலிருந்து விலகி வாழ்வதாக நீதிமன்ற வழக்குகளில் இந்நபர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT