Friday, June 14, 2024
Home » ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்

by gayan
May 14, 2024 7:00 am 0 comment

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நீண்ட கால நண்பரான செர்கை ஷொய்குவை பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

கடந்த 2012 தொடக்கம் அந்தப் பதவியில் இருந்து வந்த ஷொய்கு, ரஷ்ய பாதுகாப்பு கௌன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதிப் பிரதமர் அன்ட்ரோ பெலோசு புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவர் புதிய அமைச்சர்களை நியமனம் செய்வது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகும். எனினும் உக்ரைனுடனான போருக்கு மத்தியிலேயே பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

அவர் செய்யும் அமைச்சரவை மாற்றங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்கான வாக்களிப்பு இன்று (14) நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT