Home » இந்தோனேசியாவில் திடீர் வெள்ளத்தில் 41 பேர் பலி

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளத்தில் 41 பேர் பலி

by gayan
May 14, 2024 8:00 am 0 comment

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் மற்றும் குளிர்ந்த எரிமலை குழம்புகள் அடித்து வந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பல மணி நேரம் நீடித்த கனத்த மழையை அடுத்து மராப்பி மலையில் இருந்து வெள்ளத்துடன் எரிமலைச் சாம்பல் மற்றும் பாறைகள் அடித்து வரப்பட்டன.

இரு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு 100க்கும் அதிகமான வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் பொது வசதிகள் சோதமடைந்துள்ளன. பதினேழு பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

பொலிஸார், படையினர் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்கள் என சுமார் 400 பேர் காணாமல்போனோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாரப்பி எரிமலை கடந்த டிசம்பரில் வெடித்தபோது 20க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT