Sunday, June 23, 2024
Home » எவரெஸ்ட் ஏற்றத்தில் இருவர் புது சாதனை

எவரெஸ்ட் ஏற்றத்தில் இருவர் புது சாதனை

by gayan
May 14, 2024 6:45 am 0 comment

எவரெஸ்ட் மலையை அதிகம் ஏறி சொந்த சாதனையை முறியடித்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த கென்ட்டன் கூல் எனும் 50 வயது ஆடவர். அவர் 18ஆவது முறையாக 8,849 மீற்றர் உயரத்தை அடைந்துள்ளார்.

அவரைப் போலவே மலையேறிகளுக்கு உதவும் நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியான 54 வயது கமி ரிதா என்பவரும் 29ஆவது முறையாக அந்த உயரத்தைத் தொட்டு சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தனித்தனியாகக் குழுவைக் அழைத்துக்கொண்டு மலையேறி உள்ளனர்.

எவரெஸ்ட் மலையேற்றப் பருவம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு எதிர்வரும் வரங்களில் நூற்றுக்கணக்கான மலையேறிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டில் 600க்கும் அதிகமானவர்கள் மலையுச்சியை தொட்டபோதும் அந்த ஆண்டில் 18 பேர் மலையேற்றத்தின்போது உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT