Tuesday, May 28, 2024
Home » சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக்குடியிருப்பு அமைப்புக்களால் கௌரவிப்பு

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக்குடியிருப்பு அமைப்புக்களால் கௌரவிப்பு

by gayan
May 14, 2024 6:30 am 0 comment

யாழ் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அமுதகலாசுரபி கலாநிதி மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக்குடியிருப்பு பொதுஅமைப்புக்களால் அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.

பல்லின மக்கள் வாழும் புத்தளம் சேனைக்குடியிருப்பில் பல்வேறு நிவாரண உதவிகள், மாணவர்களுக்கான கல்விச் செயற்றிட்ட உதவிகள், அறநெறிப் பாடசாலைகளுக்கான உதவிகள், ஆலயங்களில் கட்டுமானப் பணிகளுக்கான நிதிக் கொடுப்பனவுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்கியமைக்காகவே புத்தளம் சேனைக்குடியிருப்பு மக்களால் ‘சமூகச்சுடர்’ என்ற விருது வழங்கி மோகன் சுவாமிகள் கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்து மடல், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி கெளரவிப்பு நிகழ்வில் சமூகசேவையாளரும் புத்தளம் பிரஜா பொலிஸ் ஆலோசகரும், பொருளாளருமான சுப்பையா மகேந்திரன், புத்தளம் ஓய்வுபெற்ற மருத்துவர் மு. திருச்செல்வம், பெரும்பான்மை இனத்தை சார்ந்த திரிய சக்தி திரிய வனிதா சங்கத் தலைவர் திருமதி க.நிமாலி ரேணுகா சுபசிங்ஹா மற்றும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வில் பஞ்ச புராண ஓதுதலுடன் சைவப்புலவர் சங்க செயலாளரும், சைவப்புலவருமான எஸ்.ரி. குமரனின் ஆலயவழிபாடு பற்றிய விசேட ஆன்மீக அருளுரை காலை 10.40 மணி தொடக்கம் 11.45 மணி வரை ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபா 40,000 நிதியும், தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக அறநெறி மாணவர்களை திருக்கேதீச்சரம் அழைத்துச் செல்வதற்காக ரூபா 50,000 நிதியும், பண்டாரவளை, அப்புத்தளை விஹாரகலை தமிழ் வித்தியாலயத்திற்கு படிக்கட்டு கட்டுமானப் பணிக்காக 1ம் கட்ட நிதியாக ரூபா 100,000 நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் புத்தளம் சேனைப்புலவு பிரதேச மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ்.தில்லைநாதன்…?

(கரவெட்டி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT