Saturday, July 13, 2024
Home » மன்னார் பள்ளிமுனை கடலில் வள்ளம் மூழ்கியதில் மீனவர் ஒருவர் பலி

மன்னார் பள்ளிமுனை கடலில் வள்ளம் மூழ்கியதில் மீனவர் ஒருவர் பலி

- உடன் பயணித்த மீனவர்கள் உயிர் தப்பினர்

by Prashahini
May 14, 2024 11:56 am 0 comment

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று (13) மாலை கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் கடலில் மூழ்கியதில் கடலில் விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த 62 வயதான எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் வள்ளம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது மாலை 4.00 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது.

அப்போது குறித்த மீனவர்கள் சென்ற வள்ளம் (படகு) கடலில் மூழ்கியது. உடன் பயணித்த ஏனைய மீனவர்கள் தப்பியபோதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT