Tuesday, June 25, 2024
Home » வேதாந்தியின் விவேகங்களை புரியாததால் பாரிய பின்னடைவு

வேதாந்தியின் விவேகங்களை புரியாததால் பாரிய பின்னடைவு

ஊடகவியலாளர் சட்டத்தரணி தாஜ் கவலை

by gayan
May 14, 2024 9:30 am 0 comment

லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர் வேதாந்தி ஷேகு இஸ்ஸடீனின் விவேகங்களை புரியாததால், முஸ்லிம் அரசியலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, சட்டத்தரணியும் ஊடகவியலாளருமான ஏ.எம். தாஜ் தெரிவித்தார்.

வரலாறாகும் வேதாந்தி எனும் முத்திரை வெளியீட்டு விழாவில் சிறுப்புரை நிகழ்த்தியபோதே ஏ.எம்.தாஜ் இவ்வாறு குறிப்பிட்டார். அக்கரைப்பற்றில் நடந்த இந்த முத்திரை வெளியீட்டு விழாவில் உரையாற்றி அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

முஸ்லிம் தனித்துவ அரசியலில் வேதாந்தியின் வகிபாகம் நமது சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது.

சமூக,சமயோசித சிந்தனைகளால் லங்கா முஸ்லிம் காங்கிரஸை வழி நடத்தியவர் வேதாந்தி தலைமைத்துவம் அஷ்ரபிடம் இருந்தாலும் தீட்சண்யம் தவிசாளரான வேதாந்தியிடமே இருந்தது.

இதற்கான சான்றுகளைத் தேடுவோர் வேதாந்தியின் அரசியல் பேச்சுக்கள், அறிக்கைகள் மற்றும் நடத்தைகளில் காணலாம்.

ஒலுவில் துறைமுகம் தொட்டு, உரிமை அரசியல் வரை முஸ்லிம் சமூகம் இன்று பல சவால்களை சந்தித்துள்ளமைக்கு வேதாந்தியின் விவேகங்களை புரிந்துகொள்ளாததே காரணம்.

(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT