Home » பாவனைக்குதவாத 1,70,000 கிலோ அரிசி மூடைகள் மீட்பு

பாவனைக்குதவாத 1,70,000 கிலோ அரிசி மூடைகள் மீட்பு

திகதி மாற்றியமைக்கப்பட்ட இடம் சுற்றிவளைப்பு

by gayan
May 14, 2024 8:45 am 0 comment

மனித பாவனைக்குத் தகுதியற்ற சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோ அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்தினம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோ அரிசியை 08 லொறிகளில் தனியார் அரிசி ஆலைக்கு கொண்டு

சென்று, மீண்டும் பொதி செய்து கொண்டிக்கையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 இல், காலாவதியாகியிருந்த காலாவதித் திகதி அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.கையகப்படுத்தப்பட்ட அரிசி சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT