341
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டத்தின்
கீழ் கைது செய்து வழக்குத் தொடர உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.