ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சர் மற்றும் வேதாந்தியுமான எம்.எச். ஷேகுஇஸ்ஸடீனை கௌரவித்து முத்திரை வெளியிடப்பட்டது. மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி. ஹஸனலி ஆகியோர் இணைந்து முத்திரையை வேதாந்தியிடம் கையளித்தனர்.
அகவை எண்பதில் கால்பதிக்கும் அவரின் வாழ்நாள் சாதனைகளை பாராட்டும் வகையில், வேதாந்தியின் அபிமானிகளான விடுதலைபாடிகள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு (12) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று ‘கொக்கோ கார்டனில்’ நடைபெற்றது. பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள்,விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக முன்னோடி அமைப்பினர் ஷேகு இஸ்ஸடீனைப் பாாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
முஸ்லிம்களின் அரசியல் முகவரியாக ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சமூகமயப்படுத்துவதில் ஷேகு இஸ்ஸடீன் எடுத்துக்கொண்ட வகி பாகங்கள் பற்றி, பலரும் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்