Sunday, June 23, 2024
Home » மஹிந்தவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை

மஹிந்தவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை

நிறுவனங்களின் மறுசீரமைப்பு

by gayan
May 14, 2024 7:15 am 0 comment

மின்சார சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு வேலைத் திட்டம் எதிர்காலத்தில் உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம

கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி தமது கேள்வியின் போது;

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச வளங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்துமாறும் அதற்கான நடவடிக்கைகள் புதிதாக அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மஹிந்த ராஜபக்ச கூறுவது போல் அரசாங்கம் செயற்படப் போகின்றதா? அல்லது மின்சார சபையயை தனியார் மயப்படுத்த போகின்றதா ? என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர;

மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் எந்த இடத்திலும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடப் படவில்லை.

மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

எதிர்க்கட்சிக்கு அவ்வாறான தேவை உள்ளதா? என்பது எமக்குத் தெரியாது. அரசாங்கம் மறு சீரமைப்பு வேலைத் திட்டங்களை முன் வைத்துள்ளது.

அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT