Friday, June 14, 2024
Home » ஜனாதிபதி தேர்தலை நடத்த நிதிப் பிரச்சினை ஏற்படாது

ஜனாதிபதி தேர்தலை நடத்த நிதிப் பிரச்சினை ஏற்படாது

பட்ஜட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு; அமைச்சர் சுசில்

by gayan
May 14, 2024 7:00 am 0 comment

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட திகதிகளின்படி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படல் மற்றும் திகதி நிர்ணயித்தல் ஒருபோதும் அரசாங்கம் எடுத்த திடீர் முடிவல்ல.

ஏற்கனவே. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை இல்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தின் பின்னர், நிதி மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற பிரச்சினைக்குரிய சூழ்நிலையில், ஜனாதிபதி 2022 மே மாதம் கல்வி அமைச்சர் பதவியை தன்னிடம் கையளித்ததாகவும், அதை சவாலாக ஏற்றுக்கொண்டு செயலிழந்திருந்த பாடப்புத்தகங்கள்

மற்றும் சீருடைகளை சரியான நேரத்திற்கு வழங்கவும், பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக தவறவிட்ட கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்ததன் மூலம் பரீட்சை கால அட்டவணையை படிப்படியாக வழமைக்கு கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சர் என்ற பொறுப்பையும் தமக்கு முழு சுதந்திரத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கியதை சுசில் பிரேமஜயந்த இங்கு நினைவு கூர்ந்தார். அதற்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட எதிர்காலத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT