Monday, July 22, 2024
Home » அபுதாபி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில்1.5 பில். டொலர் முதலீடு

அபுதாபி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில்1.5 பில். டொலர் முதலீடு

by Rizwan Segu Mohideen
May 13, 2024 7:20 pm 0 comment

அபுதாபி முதலீட்டு அதிகார சபையும் அமெரிக்காவை தளமாகக் கொண்டுள்ள கே.கே.ஆர். தனியார் நிறுவனமும் இந்தியாவில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளன.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவராக விளங்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரீடெய்ல் வென்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான களஞ்சிய சொத்துக்களில் இந்நிறுவனங்கள் இந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக ‘த எகொனொமிக் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

அபுதாபி முதலீட்டு அதிகார சபையும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனமும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு பணப்புழக்க நிலைத்தன்மையை உறுதி செய்யும் நீண்ட கால குத்தகை ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. அத்தோடு இந்த ஒப்பந்தங்கள் மேலும் நீடிக்கப்படலாம் என்றும் எதிர்காலத்தில் 2 பில்லியன் டொலர்களாக முதலீடுகள் உயரும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சர்வதேச கூட்டாண்மை மற்றும் விரைவாக நுகர்வோரால் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருட்கள் முதல் இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சில்லறை வர்த்தக நடவடிககைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT