Tuesday, July 23, 2024
Home » சைவ மங்கையர் வித்தியாலய மாணவ தலைவியர் ஒன்றியத்தின் இலவச மருத்துவ முகாம்

சைவ மங்கையர் வித்தியாலய மாணவ தலைவியர் ஒன்றியத்தின் இலவச மருத்துவ முகாம்

by damith
May 13, 2024 12:40 pm 0 comment

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவ தலைவியர் ஒன்றியம் 2024 ஏற்பாடு செய்த “MELIOR” இலவச மருத்துவ முகாம் அண்மையில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த நேபொட பகுதிகளிலுள்ள அரபலாகந்த பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த மருத்துவ முகாமில் நெபொட பகுதியிலுள்ள 09 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 750 கலந்து கொண்டு பலன் பெற்றனர். கண், தோல், பல், மகப்பேறு, இரத்த பரிசோதனை செய்து பல நோய்களுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை கணபதி அறநெறி பாடசாலை பொறுப்பாளர் ஆர். தனராஜ், அரபலாகந்த பாரதி தமிழ் மகா வித்தியாலய அதிபர் கே. இராஜரட்ணம் செய்துள்ளதால், இந்த செயற்பாடுகளுக்கு அனுசரணைகளை சைவ மங்கையர் அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் மூலம் பலர் நன்மையடைந்துள்ளனர். இம்மாதிரியான மருத்துவ முகாமை மலையக பெருந்தோட்ட மக்களுக்கு செய்ததையடுத்து கலந்து கொண்ட மக்கள் கருத்து கூறுகையில், சைவ மங்கையர் வித்தியாலய மாணவ தலைவியர் ஒன்றியத்துக்கும் அப்பாடசாலை அதிபருக்கும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் இதில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர் டி.வசந்தகுமார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT