Home » 2024 வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு

2024 வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு

by Prashahini
May 13, 2024 2:32 pm 0 comment

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டில் பங்குபற்றினர்.

“தேசிய வான் மற்றும் விண்வெளி சக்தியை தயார்படுத்தல் மற்றும் மீள்திறனை உருவாக்குதல்” எனும் கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இராணுவப் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

இந்த நிகழ்வின் போது எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பல முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

விமானப்படைத் தளபதி அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சித்ராங்கனி வகீஸ்வரவைச் சந்தித்தார். அங்கு அவர்கள் கடல்சார் கள விழிப்புணர்வு தொடர்பான கூட்டு முயற்சிகள் மற்றும் அவுஸ்திரேலிய இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிக்கான வாய்ப்புகளை பற்றி கலந்துரையாடினர். மேலும், இரு விமானப்படைகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ராபர்ட் சிப்மேனை சந்தித்தார்.

அதேபோன்று, அவுஸ்திரேலியாவில் உள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடனான கலந்துரையாடல்கள், ISR திறன்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட Beechcraft King Air 350 நன்கொடையின் மூலம் இலங்கை விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விமானப்படை தளபதி அவர்கள் ஜப்பானின் துணை பதவிநிலை பிரதானியான லெப்டினன்ட் ஜெனரல் டகுடோ ஒகஸ்வராவுடன் கலந்துரையாடினார்.

குறிப்பாக இதன்போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் (HADR) பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT