– மஞ்சள் நிறமாக காட்சியளித்த மைதானம்
நடப்பு IPL 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கில் விளையாடும் கடைசி லீக் போட்டியில் நேற்று (12) விளையாடியிருந்தது.
இந்தப் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ப்ளேஓப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
நேற்றையப் போட்டி தோனி சேப்பாக் மைதானத்தில் விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் மைதானம் முழுவது மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.
2017 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்கு விளையாடி வரும் தோனி 5 முறை கிண்ணத்தை வென்றுகொடுத்துள்ளார்.
அத்துடன், அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அணி என்ற பெருமையும் தோனி தலைமையிலான சென்னை அணியையே சாரும்.
எம்.எஸ்.தோனி நடப்பு IPL 2024 தொடருடன் ஓய்வு பெறுஐீவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
42 வயதான அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று IPL 2024 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார்.
நடப்பு IPL 2024 தொடரில் விளையாடுவதற்காக அவர் காலில் அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், IPL 2024 போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் தலைமைப் பொறுப்பை ருத்துராஜிடம் கொடுத்த தோனி, விக்கெட் கீப்பராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையிலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கில் விளையாடும் கடைசி லீக் போட்டியில் நேற்று விளையாடியிருந்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றை வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்றையப் போட்டி ஆரம்பிப்பற்கு முன்னதாகவே “போட்டி முடிந்தவுடன் அனைத்து ரசிகர்களையும் மைதானத்தில் காத்திருக்குமாறு” சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி போட்டி முடிந்தவுன் தோனியை கௌரவிக்கும் முகமாக பதக்கம் வழங்கப்பட்டதுடன், தோனி கையெழுத்திட்ட பந்துகளையும் ரசிகர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இத்தனை ஆண்டுகளாக சென்னை அணியின் அடையாளமாக இருந்த தோனிக்கு ரசிகர்களும் உணர்வுப்பூர்வமாக விடைகொடுத்திருந்தனர்.
அடுத்ததாக சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை அணி ப்ளேஓப் சுற்றுக்கு தகுதிப் பெற்று அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மீண்டும் சோப்பாக் மைதானத்தில் விளையாட முடியும் என்பதும் குறிப்பிடத்கதக்து.