Home » காசா சிறுவர்களுக்கு நிந்தவூரில் சேகரிக்கப்பட்ட ரூ. 54 இலட்சம்!

காசா சிறுவர்களுக்கு நிந்தவூரில் சேகரிக்கப்பட்ட ரூ. 54 இலட்சம்!

- ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு

by Prashahini
May 13, 2024 9:55 am 0 comment

காசா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காசா குழந்தைகள் நிதியத்திற்காக (Children of Gaza Fund) நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் சேகரிக்கப்பட்ட ரூபா 5,450,000.00 (ஐம்பத்து நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) நிதி கடந்த வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நிதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையானது, கடந்த 27ஆம் திகதி நிந்தவூர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிந்தவூர் பிரதேசத்தில் ஜும்மா பள்ளிவாசலின் ஆளுகைக்குள் காணப்படும் 32 பள்ளிவாசல்களின் கீழ் வசிக்கும் பொதுமக்களின் நிதிப் பங்களிப்பின் கீழ், 04 மணித்தியாலங்களுக்குள் ஐம்பத்து இரண்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து எண்ணூற்றுப் பத்து ரூபாய் (5,264,810.00) நிதி சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஜும்மா பள்ளிவாசலினால், இறுதியாக ஐம்பத்து நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசா சிறுவர் நிதியாக நிந்தவூர் மக்களால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ. எம். அப்துல் லத்தீப், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம் றசீன், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஏ.எல். பைரூஸ், நிந்தவூர் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஆஷிக் அலி, ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில் காசா சிறுவர்களுக்கு நிதி சேகரிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

கிழக்கிலிருந்து காசா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடைகள்

நிந்தவூர் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT