Thursday, July 25, 2024
Home » ஒலிம்பிக் தகுதி: இலங்கையின் மூன்று வீரர்கள் நாளை களத்தில்

ஒலிம்பிக் தகுதி: இலங்கையின் மூன்று வீரர்கள் நாளை களத்தில்

by gayan
May 11, 2024 5:24 pm 0 comment

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் இலங்கையின் மூன்று தடகள வீர, வீராங்கனைகள் ஜப்பானில் நாளை ஆரம்பமாகும் க்ரோன் பிரீ மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே ஆகிய மூவரும் பங்குபற்றவுள்ளனர்.

பாரிஸில் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடைவு மட்டத்தை பதிவுசெய்வதற்கு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிவரை உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான அடைவு மட்டத்தை இலங்கையின் எந்த தடகள வீரரும் இதுவரை எட்டவில்லை.

இந்த அடைவுக்காக கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற டுபாய் கிராண்ட்பிரீ போட்டியில் இலங்கையின் நான்கு தடகள வீரர்கள் பங்கேற்றபோதும் அவர்களால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. குறிப்பாக இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றரில் 3ஆவது இடத்தையும், நதீஷா ராமநாயக்க பெண்களுக்கான 400 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT