Thursday, June 20, 2024
Home » தேயிலை தோட்டங்களுக்கும் உரமானியம் அதிகரிக்க முடிவு

தேயிலை தோட்டங்களுக்கும் உரமானியம் அதிகரிக்க முடிவு

10 ஏக்கரிலிருந்து 50 ஏக்கர் வரை

by gayan
May 11, 2024 9:00 am 0 comment

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உர மானியத்தை 10 ஏக்கரிலிருந்து 50 ஏக்கர்வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே உர மானியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT