Tuesday, May 28, 2024
Home » கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் ஆவணங்களுடன் ஒருவர் கைது

கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் ஆவணங்களுடன் ஒருவர் கைது

இத்தாலி மற்றும் ஜேர்மன்

by gayan
May 11, 2024 9:12 am 0 comment

இத்தாலி மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருதொகை ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்றுக் (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குற்றப் புலனாய்வு

திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வசிக்கும் 38 வயது வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விமான பயணச்சீட்டு விற்பனை முகவர் நிலையத்தை நடத்தி வருவதுடன், துபாயிலிருந்து புடவை மற்றும், காலணிகளை கொண்டு வந்து நாட்டுக்குள் விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வரும் வர்த்தகர் என்றும் தெரியவந்துளளது.

கைது செய்யப்பட்ட இந்த வர்த்தகர், சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த அனைத்து ஆவணங்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT